கும்பம் - வார பலன்கள்
கவலையை வெளிக்காட்டாத கும்ப ராசி அன்பர்களே!
செவ்வாய் மாலை 4.57 மணி முதல் வியாழன் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களை முடிக்க அதிக முயற்சிகள் தேவைப்படும். நண்பர்களின் உதவி பயன்தருவதாக அமையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் வேலைகளில் அதிகக் கவனம் செலுத்துவது நல்லது. சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வருமானம் அதிகம் கிடைத்தாலும், ஓய்வில்லாமல் பணியாற்றும் நிலை ஏற்படும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்பட, புதிய வாடிக்கையாளர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு, தொழில் போட்டிகளால் பிரச்சினை உருவாகலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டு அகலும். விருந்தினர்கள் வருகையால் செலவு அதிகரிக்கும். பங்குச்சந்தையில் வழக்கமான லாபம் குறையாது.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.