கும்பம் - வார பலன்கள்
முன்யோசனையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!
தீவிர முயற்சிகளில் ஈடுபட்டாலும் சில காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தளர்வடைந்த செயல்களுக்கு தக்க நபர்களின் உதவி தேவைப்படலாம். கடுமையான வேலைப்பளுவால் சில சமயங்களில் எரிச்சல் ஏற்பட்டாலும், அதனால் வருமானம் கிடைத்தவுடன் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்திலேயே இடமாற்றம் வந்துசேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் நவீன கருவிகளின் உதவியுடன் விரைவாக வேலைகளைச் செய்து முடித்து, வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வார்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், பயணங்களில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பார்கள். கலைஞர்கள், வெளியூர் பயணம் செய்யும்போது உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.