கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 April 2023 1:37 AM IST (Updated: 21 April 2023 1:39 AM IST)
t-max-icont-min-icon

கலைகளில் ஈடுபாடு கொண்டகும்ப ராசி அன்பர்களே!

முயற்சி செய்யும் காரியங்களில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தளர்வடைந்த செயல்களுக்கு தக்கவர்களின் ஆதரவு கிடைத்து, வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். நண்பர்களின் உதவியோடு செலவுகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்குடன் கூடிய புதிய பொறுப்புகள் வந்துசேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முக்கிய செயலைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர் மூலம், தொழில் ரீதியான பொருளாதார முன்னேற்றத்திற்கு முயற்சிப்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் நீண்ட காலமாக வராமல் இருந்த உறவினர் வருகையால், மகிழ்ச்சி ஏற்பட்டாலும், செலவும் இருக்கும். கலைஞர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவர். பங்குச்சந்தை சிறப்பாக நடைபெறும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சனருக்கு, துளசி மாலை சூட்டி வழிபாடு செய்து வாருங்கள்.

1 More update

Next Story