கும்பம் - வார பலன்கள்
கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
செவ்வாய் முதல் புதன் காலை 9.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தீவிர முயற்சிகளோடு காரியங்களில் செயல்பட்டாலும் சிலவற்றில் மட்டுமே சிறப்பான வெற்றிகளை அடைவீர்கள். புதிய முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரலாம். கூடுதல் வருமானம் பெற நண்பர்களுடன் திட்டமிடுவீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் பெறக்கூடும். தள்ளிவைத்த வேலையை உடனே செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபார அபிவிருத்தி பற்றி பங்குதாரர்களிடம் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள்.