கும்பம் - வார பலன்கள்
சிறந்த எழுத்தாற்றல் கொண்டிருக்கும் கும்ப ராசி அன்பர்களே!
அனைத்து காரியங்களிலும் ஆர்வமும், முயற்சியும் காட்டினாலும், சில விஷயங்கள் மட்டுமே சாதகமாக முடியும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்க்கும் அலுவலக கடன் தொகை கைக்கு வந்து, பாதியில் நின்ற பணியைத் தொடர்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற வருமானம் வந்து மகிழ்ச்சிப்படுத்தும். கூட்டுத்தொழில் வியாபாரம், எதிர்பார்க்கும் லாபத்தைப் பெற்றுத்தரும். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணத்தை சில காலம் தள்ளிப்போடுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களே அதை சமாளித்து விடுவர். ஞாபகமறதியால் விலை உயர்ந்த பொருளை தேடி அல்லல்படுவீர்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் பெற முயற்சிப்பீர்கள். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் ஏற்படும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை அம்பாளுக்கு வெண்மையான மலர்களால் மாலை சூட்டி வழிபடுங்கள்.