கும்பம் - வார பலன்கள்
கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
முயற்சியோடு செயல்படும் சில காரியங்களில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் காணப்படும். சில செயல்களுக்கு மேலும் முயற்சிகள் தேவைப்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பதவியால் மகிழ்ச்சியேற்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் அவசரத்தை உணர்ந்து பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு திருப்தி தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் புரிபவர்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றமடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். வேலைக்குப் போகும் பெண்கள் சகப் பணியாளர்களுடன் சுமுகமாகப் பழக வேண்டும். கடன் வாங்காமல் சிக்கனமாக இருப்பது அவசியம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், வருமானம் சிறப்பாக இருக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சனப் பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.