கும்பம் - வார பலன்கள்
நேர்மையான எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
செயல்கள் பலவற்றில் முயற்சியுடன் ஈடுபட்டு, முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முக்கியமான வேலை ஒன்றைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகக் கடனுதவிகள் கிடைக்கக் கூடும்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், பணிகளில் அதிக கவனத்துடன் செயல்படுவார்கள். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெற்று, எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து உற்சாகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணவரவுகள் கிடைக்கும். பங்குச்சந்தை லாபம் அதிகமாகும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ணமலர் மாலை சூட்டி வணங்குங்கள்.