மேஷம் - வார பலன்கள்
கற்பனை வளம் நிறைந்தமேஷ ராசி அன்பர்களே!
வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதையும், பயணங்களையும் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்குடன் கூடிய புதிய பொறுப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் மூலம் தொழில் ரீதியான பொருளாதார முன்னேற்றத்தைப் பெற தீவிரமாக முயற்சிப்பார்கள்.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. புதிய தொழிலைத் தொடங்கத் திட்டமிடுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், செலவு கூடும். பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களில் உற்சாகமாக பணியாற்றுவர். பங்குச்சந்தையில் ஸ்திரமில்லாத பங்குகளை வாங்க வேண்டாம்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சுதர்சனப் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.