மேஷம் - வார பலன்கள்
நீதி நெறியில் நம்பிக்கை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால் பணப்பரிவர்த்தனை மற்றும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணப் பற்றாக்குறை இருந்தாலும், அதை சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரி உத்தரவின்பேரில் வெளியூர் சென்று பணியாற்ற வேண்டியதிருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். அதே நேரம் வருமானம் போதுமானதாக இருக்காது. கூட்டுத் தொழில் நன்றாக நடைபெறும். பொறுப்பில் உள்ளவர்கள் பணத்தைக் கையாளும்போது கவனமாக இருங்கள். பணியாளர்களின் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை ஏற்படலாம். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கலைஞர்கள், வெளியூர் பயணங்களின்போதும், பணிகளின்போதும் கவனமாக இருங்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.