மேஷம் - வார பலன்கள்
அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கும் மேஷ ராசி அன்பர்களே!
பண வரவுகள் போதுமான அளவு இருந்தாலும் பலவிதங்களில் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து தக்க சமயங்களில் கைகொடுப்பர். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், மேலதிகாரிகளின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். அனைவரிடமும் சுமுகமாக நடந்துகொள்வது அவசியம். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள், வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கும் அலட்சியத்திற்கும் ஆளாக நேரலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பணப் பொறுப்பில் உள்ளவர்களின் பணிகளை அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். புதிய கிளை தொடங்கும் எண்ணத்தை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகளை சந்திப்பீர்கள். கலைத்துறையினர் கற்பனைத் திறனோடு தங்கள் பணிகளில் கவனம் செலுத்துவர்.
சிறப்புப் பரிகாரம்:-இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.