மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:48 PM GMT (Updated: 14 Sep 2023 7:49 PM GMT)

முன் எச்சரிக்கையோடு பழகும்மேஷ ராசி அன்பர்களே!

புதன்கிழமை காலை 7.15 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிறு சிறு தடங்கல்கள் உண்டாகும். அவைகளை உடைத்து முன்னேறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிப்பீர்கள். சகப் பணியாளரிடம் சுமுகமாக நடந்து கொள்வது நல்லது.

சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை செய்து கொடுத்து நற்பெயர் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்தவாறு இருக்கும். கூட்டுத்தொழிலில் பணியாட்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். குடும்பம் சீராக நடைபெற்று வரும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவைகளைப் பெண்கள் சாமர்த்தியமாகச் சமாளிப்பார்கள். கலைஞர்கள் புதிய பணிகளில் மும்முரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்கள் வெற்றி அளிப்பதாக இருக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story