மேஷம் - வார பலன்கள்
உற்சாகத்துடன் உழைக்கும் மேஷ ராசி அன்பர்களே!
உங்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் 12.40 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வரவேண்டிய பணவரவுகள் தள்ளிப்போகும். செலவுகளைச் சமாளிக்க நண்பர்களை நாட வேண்டியதிருக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யும் நிலை ஏற்படலாம். அலுவலகம் பற்றிய வீண் பேச்சுகள் தொல்லைகளைத் தரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், நவீன கருவிகளைப் பயன்படுத்தி புதிய வாடிக்கையாளரின் பணியை விரைந்து முடிப்பார்கள். சிலருக்கு குறிப்பிட்ட காலத்தில் பணிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்கலாம். கூட்டுத்தொழில் வியாபாரம், வழக்கமான லாபம் உண்டு. மூலப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் பணிகளில் உற்சாகம் காட்டினாலும் வருமானம் இருக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு கருநீல மலர் மாலை சூட்டுங்கள்.