மேஷம் - வார பலன்கள்
29.9.2023 முதல் 5.10.2023 வரை
தவறுகளை மன்னிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
காரியங்களில் அதிக முயற்சியோடு ஈடுபட்டு வெற்றிகளை அடைவீர்கள். சிலவற்றில் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காமல் போகலாம். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நிறுத்தி வைத்த வேலையை, உயரதிகாரியின் விருப்பப்படி உடனடியாகச் செய்ய வேண்டியதிருக்கும். வீண் வாதங்களால், சக ஊழியர்களுடன் மன வருத்தம் தோன்றலாம். சொந்தத் தொழிலில் புதிய நபரின் வேலையை விரைவாகச் செய்து கொடுக்க நேரிடும். ஓய்வின்றிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கூட்டுத் தொழிலில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், எதிர்பார்க்கும் லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் தம்பதிகள் ஒற்றுமை பலப்படும். பெண்களுக்கு தாய்வழியில் ஆதாயம் ஏற்படும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற்று பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.