மேஷம் - வார பலன்கள்
6.10.2023 முதல் 12.10.2023 வரை
எச்சரிக்கையுடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!
தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிகள் பெறும் வாரம் இது. அரசு சம்பந்தமான காரியத்தில் வெற்றிபெற முயற்சி தேவைப்படும். எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், பொறுப்புகளில் கவனமாக நடந்து கொள்வது அவசியம். சகப் பணியாளர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைத்தாலும், அலைச்சல் இருக்கும். கூட்டுத்தொழிலில் சிறு சலசலப்பு ஏற்படும். கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தில் இருந்து புதிய வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறு தேக்கம் ஏற்படும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு கருநீல மலர் மாலை சூட்டுங்கள்.