மேஷம் - வார பலன்கள்
13-10-2023 முதல் 19-10-2023 வரை
உழைப்பிற்கு அஞ்சாத மேஷ ராசி அன்பர்களே!
செவ்வாய்க்கிழமை பகல் 2.45 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், செயல்கள் பலவற்றில் முயற்சியுடன் ஈடுபட வேண்டிய வாரம் இது. எதிர்பார்க்கும் பண வரவு தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சிலருக்குப் பதவிஉயர்வு ஏற்படலாம். தள்ளி வைத்த வேலையைச் செய்ய நேரலாம். சொந்தத் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும். பண வரவு கூடும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு, தொழில் அபிவிருத்திக்கு வாய்ப்பாக இருக்கும். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். சிறு சிறு கடன் தொல்லை அகலும். கலைஞர்கள் பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.