மேஷம் - வார பலன்கள்
20-10-2023 முதல் 26-10-2023 வரை
எச்சரிக்கையுடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!
நல்ல காரியங்களில் கவனமாக ஈடுபட்டு, அந்தச் செயலை சிறப்பாகச் செய்து முன்னேற்றம் காண்பீர்கள். சிறு சிறு தொல்லைகள் தலைகாட்டும். பணவரவு தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகக் கடன் தொகையும், இதர படிகளும் கிடைத்து, பாதியில் விட்டிருந்த பணிகளைத் தொடங்குவீர்கள். சொந்தத் தொழில் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவசரமான பணி ஒன்றை முடிக்க, கால நேரம் பார்க்காமல் உழைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் மந்தநிலை ஏற்பட்டாலும், வழக்கமான லாபம் குறையாது. குடும்பம் சீராக நடைபெற்று வரும். பிள்ளைகளின் படிப்பிற்காக செலவிடுவீர்கள். உறவுகளுக்குள் மனக் கசப்பு வரலாம். கலைஞர்களுக்கு பிரபல நிறுவனத்தில் இருந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள்.