மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 1:14 AM IST (Updated: 27 Oct 2023 1:28 AM IST)
t-max-icont-min-icon

27-10-2023 முதல் 2-11-2023 வரை

முயற்சியால் வெற்றிபெறும் மேஷ ராசி அன்பர்களே!

கையில் எடுக்கும் காரியங்களில், சிறுசிறு தடை உண்டாகக்கூடும். பணிகளில் இருக்கும்போது கவனமாக இருப்பது அவ சியம். உத்தியோகத்தில் சிலருக்கு, கூடுதல் பொறுப்புகள் வரும். சொந்தத் தொழிலில், வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவர். புதிய வாடிக்கையாளர்களால் பணவரவு ஏற்படும். மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடித்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். கூட்டாளிகள் ஆலோசனையின்படி நிர்வாகத்தில் உள்ளவர்கள் கட்டுப்பாட்டுடன் பணியாற்றும் நிலை வரும். நிலுவைகளை வசூலிக்கும் போது கவனமாக செயல்படுங்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் தேவையில்லாத தொல்லை ஏற்படும். குடும்பத்தில், சிறு சிறு சிக்கல்கள் தோன்றும். கலைத்துறையினர் கடின வேலைகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சந்திரனுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டுங்கள்.


Next Story