மேஷம் - வார பலன்கள்

30.12.2022 முதல் 5.1.2023 வரை
தான தர்மங்களில் நாட்டம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
அதிக முயற்சிக்குப் பிறகுதான் காரியங்கள் நடந்தேறும். பண வரவுகள் தாமதமாகும். கடிதங்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய ஆதாய வரவை, சகப் பணியாளருக்காக விட்டுக் கொடுப்பீர்கள்.
சொந்தத் தொழிலில், சிறிது முன்னேற்றம் காணப்படும். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெற்றாலும் வழக்கமான லாபமே கிடைக்கும். கூட்டாளிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலை தீர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத் தில், உறுப்பினர்களுக்கிடையே மகிழ்ச்சி ஏற்படுத்த முற்படுவீர்கள். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலமாக புதிய ஓப்பந்தங்களைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் தராவிட்டாலும், வழக்கமான வருமானம் குறையாது. முதலீடுகளை அதிகரிக்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அன்று சுக்ர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.






