மேஷம் - வார பலன்கள்
உறுதி மிக்க உள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
திங்கள் மாலை 4.42 மணி முதல் புதன்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வரவு இருந்தாலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாக வேண்டியதிருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் பணிகளை முடிக்க ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் ரீதியான தேக்க நிலை அகன்று சுறுசுறுப்பு ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், எதிர்பார்த்த லாபம் குறையாது. பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தின் புதிய ஒப்பந்தங்களில் கலந்து கொண்டு பணிகளில் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பழைய கடன் தொல்லை இருந்தாலும், பாதிப்பு இருக்காது.
பரிகாரம்:- முருகக்கடவுளுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் செல்வமும், சிறப்பும் சேரும்.