மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Feb 2023 1:17 AM IST (Updated: 24 Feb 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

துடிப்புடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!

செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். திட்டமிட்ட வரவுகள் வந்து பலன் அளித்திடும். செய்யும் பணியில் மாற்றமும், சிந்தனையில் ஏற்றமும் வந்து இன்பம் விளைவிக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவியை அடைவர். சொந்தத் தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாக இயங்குவர். புதிய வாடிக்கையாளர்களால் வேலைப்பளு அதிகரிக்கலாம். கூட்டுத் தொழில், விறுவிறுப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். கூட்டாளிகளுடன் தொழில் நிலவரம் பற்றி ஆலோசிப்பீர்கள். பணத்தை கையாளுபவர்களை, உங்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள். குடும்பம் குறைகளின்றி சிறப்புடன் நடைபெறும். வேலை செய்யும் பெண்களுக்கு, அதிக ஊதியத்துடன் புதிய வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்பு கிடைத்திடும். பங்குச்சந்தையில் லாபமும், முதலீடும் பெருகும்.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.


Next Story