மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 6 April 2023 7:57 PM GMT (Updated: 6 April 2023 8:01 PM GMT)

கலை நுணுக்கத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!

ஞாயிறு காலை 8.15 மணி முதல் செவ்வாய் பகல் 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானம் தேவை. முக்கிய காரியங்களை, கவனமாகவும், நிதானமாகவும் செய்யுங்கள். உத்தியோக ரீதியாக பயணம் செய்யும் வாய்ப்பு சிலருக்கு உண்டு. நெருங்கிய உறவு வழியில் சிறு மனக்கசப்பு உண்டாகலாம். வாகனங்களை கவனமாக கையாளுங்கள். வேலை பார்க்கும் இடத்தில் அதிகம் பேசாமல் உங்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். அக்கம் பக்கத்தினரிடம் சுமுகமாக பழகுங்கள். உடன்பிறப்புகளிடம் தேவையில்லாத வார்த்தைகளை விட வேண்டாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது.

பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை, மகாலட்சுமிக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story