மேஷம் - வார பலன்கள்
பணிகளை நுணுக்கமாகச் செய்யும் மேஷ ராசி அன்பர்களே!
காரியங்கள் சிலவற்றை சிந்தித்து செய்து சிறந்த பலனை அடைவீர்கள். முக்கியமான வேலை ஒன்றை முடிப்பதற்காக தீவிரமாக பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு அலுவலகத்தில் சில சலுகைகளை பெறுவீர்கள்.
சொந்தத் தொழிலில், அவசரப் பொறுப்புகள் வந்து சேரும். ஓய்வின்றி பணிகளைச் செய்ய நேரிடும். உதவியாளர்களின் ஒத்துழைப்பு பலன் அளிப்பதாக இருக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான லாபம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. பணப் பொறுப்பில் உள்ளவர்களை அடிக்கடி கண்காணிப்பது அவசியம். குடும்ப பிரச்சினைகள் சமாளிக்கும்படி இருக்கும். பெண்களில் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களிலேயே வருமானம் ஈட்டுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.