மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 1 Jun 2023 7:44 PM GMT (Updated: 1 Jun 2023 7:45 PM GMT)

மேன்மையான செயல்களைச் செய்யும் மேஷ ராசி அன்பர்களே!

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் பயணத்தில் கவனம் தேவை. நெருங்கிய வயதான உறவினர் மூலம் நன்மைகள் உண்டாகும். பழைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். இதுவரை மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட தடைகள் விலகும். மனசஞ்சலம் தோன்றும்போது விநாயகரின் வழிபாடு அமைதியைத் தரும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நீண்ட கால பகை விலகும். வழக்கம் போல் எதிரிகளை நண்பர்களாகக் கருதும் உங்கள் குணம், உங்களுக்குக் கை கொடுக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களும், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களும் அதிக கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் இது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபட்டு, நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story