மேஷம் - வார பலன்கள்
இன்முகத்துடன் காட்சியளிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
சில காரியங்களில் அதிக முயற்சியும், நண்பர்களின் ஆதரவும் தேவைப்படலாம். பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில், பதிவேடுகளை இடம் மாற்றி வைத்து விட்டு அவசியத் தேவைக்கு உடனே கிடைக்காமல் சிரமப்பட நேரலாம். சகப் பணியாளர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் தொழிலுக்கேற்ற நவீன கருவிகளின் துணையோடு பணிகளில் விரைந்து செயல்படுவார்கள். கூட்டு வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கக்கூடும். கலைஞர்கள் அதிக வருமானம் உள்ள ஒப்பந்தங்களைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரக பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.