மேஷம்- வார ராசிபலன்


மேஷம்- வார ராசிபலன்
தினத்தந்தி 9 May 2024 2:19 PM IST (Updated: 9 May 2024 2:56 PM IST)
t-max-icont-min-icon

05.05.2024 முதல் 11.5.2024 வரை

வாரத்தின் முற்பகுதியில், உங்கள் உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்க, பேச்சுக்களில் கவனம் தேவை. சிலர் வேண்டுமென்றே விஷமப் பேச்சுகளை பேசுவர். இது உங்கள் பணநஷ்டத்திற்கு காரணமாக அமையும். பெண்கள் வீட்டில் விதவிதமான உணவுப் பொருட்களை தயாரித்து, குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள். கடந்த சில வாரங்களாக உங்கள் நிம்மதியை கெடுத்த சில பிரச்சனைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீர்கள். சிலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலர் கண் புரை அகற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.


Next Story