கடகம் - வார பலன்கள்
07-07-2023 முதல் 13-7-2023 வரை
கலைகளில் ஈடுபாடு நிறைந்த கடக ராசி அன்பர்களே!
வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிர்பாராத இடையூறுகளை சந்திக்க நேரிடும். இருந் தாலும் அதிக முயற்சியுடன் பல காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் தங்களது வேலையை விட்டுவிட்டு அதிக ஆதாயமுள்ள வேலைக்குச் செல்ல முயற்சி செய்வார்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், செய்து கொடுத்த பணியில் உள்ள குறைகளை மீண்டும் சரி செய்து கொடுக்க நேரலாம். புதிய வாடிக்கையாளருக்கு முக்கிய வேலை ஒன்றை விரைவாகச் செய்து கொடுப்பீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், எதிர்பார்க்கும் லாபத்தில் குறையிருக்காது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பணியாற்றும் பெண்களுக்கு சம்பள உயர்வு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பணியாற்றுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சனருக்கு துளசி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.