கடகம் - வார பலன்கள்
எடுத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் கடக ராசி அன்பர்களே!
காரியங்களை தீவிர முயற்சியுடன் திட்டமிட்டு செய்தாலும், திடீர் திருப்பங்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பண வரவு இருந்தாலும் வரவுகளை விட செலவுகள் மிகுதியாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் திருப்பமான சூழ்நிலையைச் சந்திப்பார்கள். அலுவலகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுகள் கிடைத்து, விடுபட்ட பணிகளைத் தொடருவீர்கள். சொந்தத்தொழிலில் சிறப்பான திருப்பம் இருக்கும். தெய்வீகமான பணிகளில் நாட்டம் செல்லும். கூட்டுத் தொழில் எதிர்பார்க்கும் லாபத்தைக் கொடுக்கும். கூட்டாளிகளில் ஒருவர் மனவேறுபாட்டால் பிரிந்து செல்லலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைஞர்கள், விருது, பாராட்டு பெறுவதற்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்ளக்கூடும். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூாியனுக்கு மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.