கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:23 AM IST (Updated: 21 July 2023 1:24 AM IST)
t-max-icont-min-icon

தன்னம்பிக்கை மிகுந்த கடக ராசி அன்பர்களே!

உங்கள் முயற்சிகள் பலவும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி மாற்றம் ஏற்பட்டு, குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெறுவர். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் தயாரிப்புகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தொழிலகத்தை அதிக முதலீடு செய்து மாற்றி அமைப்பீர்கள்.

கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் புதிய மாற்றங்கள் செய்யும் பொழுது கூட்டாளிகளின் ஒப்புதலுடன் செய்வது நிர்வாகப் பிரச்சினைகளைத் தவிர்க்கும். கொள்முதல் செய்ய நிர்வாகத்தினரே நேரில் செல்வது பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் வரவு இருந்தாலும், சுபச்செலவு அதிகரிக்கும். கடன்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வளர்ச்சியைத் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

1 More update

Next Story