கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2023 1:05 AM IST (Updated: 28 July 2023 1:06 AM IST)
t-max-icont-min-icon

சிந்தனை ஆற்றலுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் சக அதிகாரிகளையும், சகப் பணியாளர்களையும் அனுசரித்துச் செல்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். உங்களின் திறமைக்காக புதிய பொறுப்புகள் வந்துசேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களையும், ஊழியர்களையும் சுமுகமாக கையாளுங்கள். வியாபாரம் செய்யும் பொருட்களின் தரம் மற்றும் நியாயமான விலை, உங்களுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்த முயற்சிக்க வேண்டாம். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் எழுந்தாலும், உங்களின் சாமர்த்தியத்தால் அவற்றை சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற கடுமையாக முயற்சிக்க வேண்டியதிருக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சிவனுக்குரிய பூஜைப் பொருட்களை வாங்கிக் கொடுத்து வணங்குங்கள்.


Next Story