கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:39 AM IST (Updated: 4 Aug 2023 12:48 AM IST)
t-max-icont-min-icon

4.8.2023 முதல் 10.8.2023 வரை

தான தர்மங்களில் அதிக பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உங்கள் செயல்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறும் வாரம் இது. நண்பர்களும், உறவினர்களும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் தன வரவுகள் வந்துசேரும். முக்கிய ஆன்மிக நிகழ்ச்சிக்குப் பண உதவி செய்யும் சந்தர்ப்பம் ஏற்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சொந்தத் தொழிலில் பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். கலைஞர்கள் பிரபல நிறுவன ஒப்பந்தங்களில் மகிழ்வுடன் பணியாற்றுவர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story