கடகம் - வார பலன்கள்
முன்னேற்றம் காண முனைப்புடன் பாடுபடும் கடக ராசி அன்பர்களே!
செய்தொழில் சிறப்பாக நடைபெற்றாலும், தவிர்க்க முடியாத செலவுகளால் மன சஞ்சலம் உருவாகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து மகிழ்வடைவீர்கள். உறவுகளின் ஆதரவான பேச்சுகள் மனநிறைவைத் தரும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் பணி நெருக்கடியை சந்திக்க நேரிடும். சொந்தத்தொழிலில் கவனமாக இருந்தால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெறமுடியும். நிலுவைகள் வசூலாவதில் சிரமங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். எதிர்பார்க்கும் ஆதாயம் தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சுபகாரியங்கள் தள்ளிப்போகும். பெண்கள், தங்கள் உறவினர்கள் இல்லத்து மங்கல நிகழ்வில் பங்கேற்பர். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தில் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள்.