கடகம் - வார பலன்கள்
27-10-2023 முதல் 2-11-2023 வரை
நீதி நெறி தவறாத கடக ராசி அன்பர்களே!
உடன்பிறப்புகளால் ஏற்பட்ட சிறு சலசலப்பினால், மன அமைதிக்கு பாதிப்பு நேரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சொந்தத் தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். செய்யும் பணிகளில் புதிய யுக்தியைக் கையாண்டு பாராட்டுப் பெறுவீர்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு மகிழ் வளிப்பதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணிசமான லாபம் பெறுவர். நவீனக் கருவிகளை வாங்குவது பற்றி கூட்டாளி களுடன் ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் போதுமான வருமானம் இருக்கும். கடன் தொல்லைகள் இருந்தாலும் அதிகமான பாதிப்பு ஏற்படாது. நீதிமன்ற வழக்குகள் தள்ளிப் போகலாம். கலைஞர்கள், பிரபல நிறுவனத்திடம் இருந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை பராசக்திக்கு மணம் வீசும் மலர் மாலை சூட்டுங்கள்.