கடகம் - வார பலன்கள்
எதிலும் திறமையாக செயல்படும் கடக ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொடுக்கல் - வாங்கலில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு இருந்தாலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய உத்திகளைக் கையாண்டு வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பார்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தையில் பங்குகளின் தன்மை அறிந்து முதலீடு செய்வது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கு பெறுவார்கள். சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பால் பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். குடும்பம் சீராக நடைபெறும். கடன் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
பரிகாரம்:- ஹயக்ரீவ பெருமாளுக்கு வியாழக்கிழமை துளசிமாலை சூட்டி வழிபாடு செய்வது நல்ல பலன் தரும்.