கடகம் - வார பலன்கள்
நிர்வாகத் திறன் மிகுந்த கடக ராசி அன்பர்களே!
உங்கள் பிரச்சினை சமாளிக்கக் கூடியதாக இருக்கும். பணப்புழக்கம் சரளமாகும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலர் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதில் தடங்கல் ஏற்படும். இருப்பினும் எதிர்பாராத வருமானங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற முடியா விட்டாலும் கைவசம் உள்ள பணிகளில் கவனம் செலுத்தி, கைநிறையப் பொருள் ஈட்டுவர்.
மாணவர்கள் படிப்பில் அக்கறையாக செயல்படுவதோடு, சுறுசுறுப்பாகவும் இயங்குவர். பெண்களின் மகிழ்ச்சி கூடுதலாகவே காணப்படும். குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது. சுபநிகழ்ச்சி ஒன்று திடீரென முடிவாகி மகிழ்ச்சிப்படுத்தும்.
பரிகாரம்:- சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், நற்செய்திகள் தேடி வரும்.