கடகம் - வார பலன்கள்
சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழும் கடக ராசி அன்பர்களே!
உற்சாகத்தோடு பணிகளில் ஈடுபட்டு, பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், அவசர வேலை ஒன்றை சிறப்பாகச் செய்து, உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சொந்தத்தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் பணியை விரைந்து முடிக்க, ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெறும். வியாபார அபிவிருத்திக்காக கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள், முன்னேற்றமான பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதாரத்தை உயர்த்தும்.
குடும்பத்தில் முன்னேற்றம் காணப்படும். சுபகாரியங்கள் நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு திட்டமிட்ட செயல்களில் நல்ல திருப்பம் உண்டாகும். இல்லற சேமிப்பு பெருகும்.
பரிகாரம்:- துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கினால் காரியம் நிறைவேறும்.