கடகம் - வார பலன்கள்
30.12.2022 முதல் 5.1.2023 வரை
உழைப்பில் திறமை, பேச்சுவன்மை கொண்ட கடக ராசி அன்பர்களே!
இந்த வாரம் செயல்கள் பலவற்றை திட்டமிட்டு செய்தாலும், அவை அனைத்திலும் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. சில செயல்களில் தளர்ச்சி ஏற்படத்தான் செய்யும். முக்கிய பணிகளை திட்டமிட்டு செய்யுங்கள். உத்தியோகத்தில் உங்கள் சிறு தவறும், உயரதிகாரிகளின் கோபத்தை அதிகரிக்கலாம்.
சொந்தத் தொழிலில், அதிகப் பணிகள் வந்து சேரும். தள்ளிப்போட்ட வேலைகளையும் ஓய்வில்லாமல் இரவுபகலாக செய்து கொடுத்து வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வருவாயைத் தரும்.
குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். கலைஞர்கள், தங்கள் பணிகளில் ஆர்வத்துடன் செயலாற்றுவார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு பலனளிக்கும்.
பரிகாரம்:- ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யலாம்.