கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 6 Jan 2023 1:42 AM IST (Updated: 6 Jan 2023 1:43 AM IST)
t-max-icont-min-icon

கருணை மிகுந்த மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு திடீர் தனவரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிலும் நிதானத்துடன் நடந்துகொள்வது, நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் கணிசமான லாபம் பெற்று திருப்தி அடைவார்கள். கலைஞர்கள், தற்போது கைவசம் உள்ள வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதே போதுமானது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே குதூகலத்துக்குக் குறைவிருக்காது.

குடும்ப உறுப்பினர் யாருக்கேனும் ஒருவருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். நீண்ட காலம் முயற்சித்த ஒரு விஷயம் கைகூடி வரும். சிலருக்கு எதிர்பாராத பயணமும், ஒரு சிலருக்கு திட்டமிட்டபடி ஆன்மிக யாத்திரையும் உண்டு.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு தீபமேற்றி வணங்கினால் வாழ்வு வளமாகும்.


Next Story