கடகம் - வார பலன்கள்
பணிகளை நுணுக்கமாக செய்து முடிக்கும் கடக ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, செல்வாக்கு அதிகமுள்ள பொறுப்புகள் வந்துசேரும். அவசியமான பணியை விரைவாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்கு உதவியாளரின் துணையுடன், கடினமான வேலை ஒன்றைச் செய்து கொடுப்பீர்கள். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகளைத் தொடங்குவீர்கள். பெண்களில் சிலருக்கு சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம். சுலைஞர்களில் சிலர், நலிந்த கலைஞரின் குடும்பத்திற்கு உதவி செய்வார்கள். ஒரு சிலர் பிரபல நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகளை பெற முயற்சி மேற்கொள்வார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு, நெய்தீபமிட்டால் வந்தவினை அகலும்.