கடகம் - வார பலன்கள்
நண்பர்களிடம் இனிமையாக பேசிப் பழகும் கடக ராசி அன்பர்களே!
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. நிதானமாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் எல்லாம் நல்ல ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை அடைவார்கள்.
நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கடன் உதவி, அலுவலகம் அல்லது வங்கி மூலமாக கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசுத் துறையினரிடம் இருந்து அனுகூலமான பதில் கிடைக்கும். பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஓரளவு சரிசெய்வீர்கள். சமூகத் தொண்டில் ஈடுபடுபவர்களும், கலைத் துறையினரும், இசைக்கலைஞர்களும் பலரது பாராட்டுக்களைப் பெறுவார்கள். மருத்துவச் செலவுகளும், வீண் அலைச்சலும் ஏற்படும் காலகட்டம் இது. வடமேற்கு திசையில் இருந்து ஒரு நல்ல தகவல் வந்து சேரும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.