கடகம் - வார பலன்கள்
சிறிய செயலையும் சிறப்பாகச் செய்யும் கடக ராசி அன்பர்களே!
நட்புக்காக வலிய சென்று உதவி செய்ய நேரிடும். வாகனங்களை இரவல் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உறவுகள் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், பேசி தீர்த்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அலுவலகம் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளிலும் நற்பலன்களே நடைபெறும். உயர் அதிகாரிகளுக்கு உங்கள் பேரில் நன்மதிப்பு ஏற்பட கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள்.
தொழில் செய்பவர்கள், போட்டிகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அதைக் கடந்து முன்னேற்றம் காண்பீர்கள். நேரடியாக முயற்சி செய்வதன் மூலம் கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வாரம் இது. குடும்பத்தில் இனிமையான சூழ்நிலை ஏற்பட, அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள், அதற்கான பணியில் ஈடுபடலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சைப் பழ மாலை சூட்டுங்கள்.