கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 March 2023 1:22 AM IST (Updated: 17 March 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

உயர்ந்த எண்ணம் கொண்ட கடக ராசி அன்பர்களே!

ஞாயிறு காலை 9.41 மணி முதல் செவ்வாய் பகல் 12.28 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், நீங்கள் எடுத்துக் கொண்ட செயல்கள் சிலவற்றில் தடங்கல்கள் உண்டாகும். இருந்தாலும், முடிவில் வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பற்றியோ, சம்பள உயர்வு குறித்தோ, கோரிக்கை வைக்க சிறிது காலம் பொறுமையாக காத்திருப்பது நல்லது. சொந்தத் தொழில் நன்றாக நடைபெற அதிக உழைப்பை வெளிப்படுத்த வேண்டியது இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

குடும்பம் நன்றாக நடந்து வந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கக்கத்தான் செய்யும். பெண்களுக்கு மனவருத்தங்கள் விலகி, மங்களகரமான விஷயங்கள் குடும்பத்தில் நடைபெறும். கலைஞர்கள், பணியாற்றும்போது கவனமாக இருப்பது அவசியம்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசிமாலை சூட்டினால் நிம்மதியான வாழ்க்கை அமையும்.

1 More update

Next Story