கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 March 2023 1:22 AM IST (Updated: 24 March 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

அன்பிற்கு கட்டுப்பட்டு நடக்கும் கடக ராசி அன்பர்களே!

பணத்தேவைகள் அதிகரிக்கும் வாரம் இது. சிக்கனமாகச் செலவு செய்வதன் மூலம் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சூழ்நிலைகள் சாதகமாக இல்லாவிட்டாலும், எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு பொறுப்பான பதவிகளும் வந்துசேரும்.

கூட்டுத் தொழில் செய்பவர்கள், தொழிலாளர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வதன் மூலம், தொழில் வளர்ச்சி பாதிக்காமல் தடுக்க இயலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துவது தவிர, வேறு மாற்றம் எதுவும் இருக்காது. சொந்தத் தொழிலில் வியாபாரம் ஓரளவு லாபகரமாகவே நடைபெறும். என்றாலும் வேலையாட்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் மகன் அல்லது மகளால் சிறு சங்கடங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பயணங்களின் போது கவனமாக இருங்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் தினமும் காலை சூரிய பகவானை வணங்குவதுடன், ஆதித்ய ஹிருதயம் படியுங்கள்.


Next Story