கடகம் - வார பலன்கள்
தர்மம் செய்வதில் ஆர்வமுள்ள கடக ராசி அன்பர்களே!
சில காரியங்கள் எதிர்பார்க்கும் திருப்தியை அடைய, தீவிர முயற்சி தேவைப்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு தாமதப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிக வேலையினால் அல்லல்பட நேரலாம். சக நண்பர்களின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதால், பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் வேலையில் உள்ள குறைகளை சரி செய்து கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். கூட்டுத் தொழிலில் அதிக லாபம் ஏற்படலாம். பங்குதாரர்களின் ஆலோசனையின்படி முதலீடுகளை அதிகப்படுத்த முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு தொல்லைகள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி உற்சாகப்படுத்துவீர்கள். கலைஞர்கள் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமி தேவிக்கு செந்தாமரை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.