கடகம் - வார பலன்கள்
அனைவரிடமும் அன்பு கொள்ளும் கடக ராசி அன்பர்களே!
உங்கள் செயல்கள் பலவற்றில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களும், உறவினர்களும் தக்க சமயத்தில் உதவ காத்திருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள், சகப் பணியாளர்களிடம் அன்பாக நடந்துகொள்வது நல்லது. பிறகு செய்ய நினைத்த வேலையொன்றை உயர் அதிகாரிகளின் விருப்பப்படி உடனே செய்ய நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைகளில் பரபரப்பாக இருப்பார்கள். பொருளாதார வசதி மேம்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டு முயற்சி புதிய முன்னேற்றத்தை தரும். குடும்பம் சீரான முறையில் நடைபெறும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். விலகியிருந்த உறவினர்கள் தானாக வந்து இணைவார்கள். கலைஞர்களுக்கு பிரபல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். கடின பணிகளில் நேரடியாகக் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தை வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு செவ்வரளி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.