கடகம் - வார பலன்கள்
எழுத்தாற்றலும், செயல் திறனுமுடைய கடக ராசி அன்பர்களே!
செய்யும் செயல்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு சனிக்கிழமை மாலை 5.42 மணி முதல் திங்கட்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. பயணங்களில் கவனம் தேவை. பண வரவுகள் சிறிது தாமதமாக வந்துசேரலாம்.
உத்தியோகஸ்தர்களில் சிலருக்குப் புதிய பதவிகள் வந்துசேரும். பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்தாவிட்டால் உயரதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர் ஒருவரால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அவசர வேலைகளால் ஓய்வு நேரம் குறையும். குடும்பத்தில் பெண்களுக்கு அதிக செலவும் ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். அதிகமான செலவுகளால் சிரமப்பட நேரலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பராசக்திக்கு, வெண்மையான மலர் சூட்டி வழிபடுங்கள்.