கடகம் - வார பலன்கள்
நேர்மை மிக்க நெஞ்சம் கொண்ட கடக ராசி அன்பர்களே!
நண்பர்கள் உதவியால், சில காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள், உடன் இருப்பவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை ஒன்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளரின் வேலையில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள். பணிகளை முடிக்க ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். தொழில் முன்னேற்றம் பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் நன்கு நடைபெற்றாலும், ஓரளவே லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகளும் தலைகாட்டலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்காதேவிக்கு, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் வாழ்வில் ஒளிவீசும்.