கடகம் - வார பலன்கள்
இன்முகத்துடன் காரியத்தை செய்யும் கடக ராசி அன்பர்களே!
தீவிர முயற்சியுடன் செயல்களில் பாடுபடுவீர்கள். சில காரியங்கள் வெற்றியளித்தாலும், சில காரியங்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போகக்கூடும். திட்டமிட்ட பணவரவு தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்திலேயே பொறுப்புகள் மாறக்கூடும். சிலருக்கு வெளியிடங்களுக்கு மாறுதல் இருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட நபரின் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றுவர். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சுமாரான லாபம் பெறக்கூடும். பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும். பெண்கள், உறவினர்களின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களால் மகிழ்வர். பொருள் வரவும், புகழ் வரவும் உண்டு.
பரிகாரம்:- இந்தவாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.