கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 May 2023 1:23 AM IST (Updated: 12 May 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களை குறைவின்றி செய்து முடிக்கும் கடக ராசி அன்பர்களே!

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், அதிக முயற்சிகளோடு செயல்பட்டாலும், சில காரியங்களிலேயே எதிர்பார்க்கும் பலன்களை அடைவீர்கள். செய்யும் வேலையை விட்டு, சிறந்த வேலை பெற சந்தர்ப்பம் உருவாகலாம். கடிதம் மூலம் பயணம் ஒன்று ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் எண்ணப்படி, நிறுத்தி வைத்த வேலை ஒன்றைச் செய்யும் நிலை ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், முக்கிய அவசர வேலையை ஓய்வின்றி செய்து பாராட்டு பெறுவார்கள். கூட்டு வியாபாரம், அதிக லாபம் தரக்கூடும். வியாபார அபிவிருத்தி பற்றி பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பம் சீராக நடைபெற்றாலும் சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடினமான பணிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி தீபம் ஏற்றுங்கள்.

1 More update

Next Story