கடகம் - வார பலன்கள்
பேச்சுகளால் பிறர் மனம் கவரும் கடக ராசி அன்பர்களே!
காரியங்கள் சிலவற்றில் தளர்வு ஏற்பட்டாலும், மற்றவைகளில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமைகளில் அதிகக் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அலுவலகக் கடன்கள் வந்து சேர்ந்து, இடையில் நிறுத்தியிருந்த வேலைகளை தொடரும் வாய்ப்பு உருவாகும். சொந்தத்தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஓய்வின்றி பணிகளில் ஈடுபடுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், குடும்பம் சிக்கலின்றி சீராக நடைபெறும். தந்தை வழி உறவுகள் மூலம் பெண்களுக்குள் சிறு மனவேறுபாடு ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப்பெற முயற்சிகளை மேற்கொள்வர். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் உண்டு.
பரிகாரம்:-இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு, கொண்டைக்கடலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.