கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2023 8:04 PM GMT (Updated: 25 May 2023 8:05 PM GMT)

கலையழகுடன் காரியங்கள் செய்யும் கடக ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்கள் சிலவற்றில் சிறப்பான முயற்சியுடன் செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். மிகவும் அவசியமான காரியங்களை, கவனத்துடனும், நிதானத்துடனும் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், பழைய வேலையை விட்டு விட்டு அதிக வருமானமுள்ள பணியில் அமரக்கூடும். சிலருக்கு அலுவலகத்தில் அதிகப் பொறுப்புள்ள பணிகள் கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் அவசியமான வேலையை விரைந்து கொடுக்க நேரிடும். அவர் மூலம் தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவையை சரியான காலத்தில் பூர்த்தி செய்து அவர்களிடம் பாராட்டுப் பெறுவார்கள். குடும்பத்தில் சிறிய கடன் தொல்லை இருக்கலாம். பங்குச்சந்தை லாபம் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு கருநீல மலர் சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story